திருமூலர் இயற்கை வாழ்வியல் அறக்கட்டளையின் நோக்கம்

வாழ்க வளமுடன்!

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கிற உயர்ந்த எண்ணத்துடன், திருமூலர் தன்னுடைய அனுபவத்தை உலகெங்கும் பகிர்ந்தருள, திருமந்திரம் எனப்படும் மூவாயிரம் பாடல்களைக் கொண்ட நூலை இயற்றி அருளினார். இதில், அட்டாங்க யோகத்தின் முழு கோட்பாடுகளும், அவற்றின் பயன்களும் தந்தி, மனித வாழ்வின் முழுமையை அடைவதற்கான வழிகளை காட்டியுள்ளார்.

இந்த யோகக் கல்வியை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால், வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு முழுமை உணர்வு கிடைக்கும். இதை கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். இந்த யோகக் கல்வியை மேலும் விரிவாக்கி, உலகெங்கும் பரப்புவதே திருமூலர் இயற்கை வாழ்வியல் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?

இயற்கை வாழ்வியல் என்பது மனித வாழ்வின் முழுமையையும் அடையத் துணை புரியும் அட்டாங்க யோகக் கல்வி ஆகும். மண்ணுக்கும் மனிதனுக்கும் இணக்கமான வாழ்க்கை முறைகளை உருவாக்கி, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் காட்டிய வழியில் பயணிக்கிறது.

இது மட்டுமல்லாமல், சித்தர்கள் கண்டறிந்த மூலிகைகளை வளர்த்தெடுத்து, வாழ்வியலில் அதனை பயன்படுத்தி ஒரு இனிய வாழ்க்கையை உருவாக்குவதே அறக்கட்டளையின் முக்கியத்துவமான பணி. மேலும், சமூக சமநிலையை நிலைநாட்டும் பாதையை உருவாக்குவது எங்கள் குறிக்கோளாகும்.